நித்தம் நித்தம் என்னுள்ளே
நிம்மதி தந்து போனவளே!
சித்தம் மொத்தம் என்னுள்ளே
சிலையாய் வந்து நின்றவளே!
கலைகள் மொத்தம் கற்றுண்டு
கண்ணடி வித்தை செய்தவளே!
எந்தன் கவிதை நீ கேட்டு
நில்லடி கொஞ்சம் என்னவளே!
பாலை மணல்கள் பறந்தோட
காற்றும் கொஞ்சம் அனலாட
நினைவில் நீயே விளையாட
எந்தன் நாவும் உன் கவிபாட
கேளடி கொஞ்சம் என்னவளே!
என் நெஞ்சமதில் நீ வந்து
தஞ்சமதை நான் தந்து
பஞ்சமில்லா பாரினிலே
கஞ்ச முத்தம் தந்தவளே!
மிச்சம் எப்போ என்னவளே!
உன் பாதம் பட்ட வாசல்படி
பூக்கள் கொஞ்சம் கேட்டதடி
பூக்கள் அதை நான் தூவ
புன்னகையில் பூகூட
பூப்பெய்தி விட்டதடி!
0 comments:
Post a Comment