
நித்தம் நித்தம் என்னுள்ளேநிம்மதி தந்து போனவளே!சித்தம் மொத்தம் என்னுள்ளேசிலையாய் வந்து நின்றவளே!கலைகள் மொத்தம் கற்றுண்டுகண்ணடி வித்தை செய்தவளே!எந்தன் கவிதை நீ கேட்டுநில்லடி கொஞ்சம் என்னவளே!பாலை மணல்கள் பறந்தோடகாற்றும் கொஞ்சம் அனலாடநினைவில் நீயே விளையாடஎந்தன் நாவும் உன் கவிபாடகேளடி கொஞ்சம் என்னவளே!என் நெஞ்சமதில் நீ வந்துதஞ்சமதை நான் தந்துபஞ்சமில்லா பாரினிலேகஞ்ச முத்தம் தந்தவளே!மிச்சம் எப்போ என்னவளே!உன் பாதம் பட்ட வாசல்படிபூக்கள் கொஞ்சம் கேட்டதடிபூக்கள்...